TrendRecipe(仮)
AboutEnglish

タミル風ピーナッツライス | サット弁当

原題: சட்டுனு லஞ்ச் பாக்ஸ்க்கு இத செஞ்சி குடுங்க! 🤤 | Peanut Rice in Tamil

Ammavum AduppadiyumSNSで見る ↗

その他海外投稿日: 2026/07/09

57.9万8.5千💬 62

再生数の推移(直近9日): 53.7万 → 57.9万

📝 編集部メモ

タミル圏で人気のピーナッツペーストベースの混ぜご飯。朝の仕込み時間5〜10分で、香りと栄養価が高い弁当おかずが完成する時短レシピ。ナッツペーストを事前に粉末化する工程が、量産対応の仕込みに応用できそう。

主な食材

投稿キャプション(概要欄)

காலையில அவசர அவசரமா லஞ்ச் பாக்ஸ்க்கு என்ன செய்யறதுன்னு யோசிக்கிறீங்களா? அப்போ சட்டுபுட்டுனு செய்யக்கூடிய இந்த கமகமக்கும் 'வேர்க்கடலை சாதம்' (Peanut Rice) செஞ்சி பாருங்க. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும், லஞ்ச் பாக்ஸ் காலியாகி தான் வரும்! 👇 ​🛒 தேவையான பொருட்கள் (Ingredients): ----------------------------------------------------------------------------- ​பொடி செய்ய: ---------------------------- ​வேர்க்கடலை (Peanuts) - 2 கைப்பிடி ​காஞ்ச மிளகாய் (Dry Red Chilli) - 4 ​தேங்காய் (Coconut) - 2 பத்தைகள் (சிறிய துண்டுகள்) ​பூண்டு (Garlic) - 4 பல் ​எள்ளு (Sesame seeds) - 2 ஸ்பூன் ​தாளிக்க & சாதம் கிளற: ----------------------------------------------- ​எண்ணெய் (Oil) - தேவையான அளவு ​கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு (Chana & Urad dal) - தலா 1 ஸ்பூன் ​முந்திரி (Cashews) - சிறிதளவு ​சிறிய வெங்காயம் (Small Onion) - 1 (பொடியாக நறுக்கியது) ​பச்சை மிளகாய் (Green Chilli) - 1 (பொடியாக நறுக்கியது) ​கறிவேப்பிலை (Curry leaves) - ஒரு கைப்பிடி ​உப்பு (Salt) - தேவையான அளவு ​வடித்த சாதம் (Cooked Rice) - தேவையான அளவு ​🍳 செய்முறை (Making Steps): ---------------------------------------‐----------------- 🔸️​ஒரு பேனில் 2 கைப்பிடி அளவு வேர்க்கடலையைச் சேர்த்து நன்றாக வறுத்து எடுத்துக்கொள்ளவும். 🔸️​அதே பேனில் காஞ்ச மிளகாய், தேங்காய், பூண்டு மற்றும் எள்ளு சேர்த்து பொரியும் வரை வறுத்து எடுக்கவும். 🔸️​வறுத்த பொருட்கள் அனைத்தையும் நன்றாக ஆறவைத்து, மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக (Pulse mode) அரைத்து எடுத்துக்கொள்ளவும். 🔸️​ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, முந்திரி சேர்த்து லேசாக சிவக்க வறுக்கவும். 🔸️​அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், ஒரு கைப்பிடி கறிவேப்பிலை சேர்த்து லேசாக வதக்கவும் (வெங்காயம் நிறம் மாறினால் போதும்). 🔸️​தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கிய பின், அரைத்து வைத்துள்ள வேர்க்கடலை பொடியைச் சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டவும். 🔸️​இறுதியாக, உதிரியாக வடித்து வைத்துள்ள சாதத்தைச் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கினால்... கமகமக்கும் 'வேர்க்கடலை சாதம்' ரெடி! நல்லா சாப்பிடுங்க நல்லத சாப்பிடுங்க ❤❤❤❤நமது வீடியோக்களைப் பார்த்து ஆதரவு தரும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்! வீடியோ பிடிச்சிருந்தா மறக்காம லைக் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க மற்றும் சப்ஸ்கிரைப் பண்ணுங்க! ❤️ #AmmavumAduppadiyum #PeanutRice #VerkadalaiSadam #LunchBoxRecipe #QuickLunch #TamilRecipes #Shorts #KidsLunchBox #EasyVarietyRice #OfficeLunch #PeanutRecipe

タグ

広告広告枠(準備中)